search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திங்கள் நகர்"

    • நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுகிறது.

    இரணியல்:

    திங்கள்நகர்-நெய்யூர்-அழகிய மண்டபம் செல்லும் சாலையில் இரட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுவதால் இரட்டை ரெயில்வே மேம்பால பணிகள் நடை பெறும் இடத்தை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் கடந்த 26-ந்தேதி பார்வை யிட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்லவும் பணிகளை சுமார் 40 நாட்களில் விரைந்து முடிக்கவும் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், ரெயில்வே துணை முதன்மை பொறியாளர் பமிலா, குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    இந்நிலையில் நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, திங்கள் நகரில் இருந்து திருவிதாங்கோடு, அழகிய மண்டபம் செல்லும் வாகனங்கள் திங்கள்நகர் ரவுண்டானா, இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில், தக்கலை வழியாகவும், அழகிய மண்டபம், திரு விதாங்கோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் வாகனங்கள் திரு விதாங்கோடு, வட்டம், ஆழ்வார் கோவில், இரணி யல் சந்திப்பு திங்கள் நகர் வழியாகவும் செல்லும்படி ஒருவழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்ப டுகிறது. ஆகவே பொது மக்கள் போக்குவரத்து காவல்துறைக்கும், ரெயில்வே நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து மாற்று பாதையில் செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கவுன்சிலர்கள் மீது தாக்குதல்
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சி யில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை உள்ள வரவு செலவு மற்றும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மற்ற கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.க. கவுன்சிலர் ஜெயசேகரன், காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் பீட்டர்தாஸ் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

    இதையடுத்து ஜெயசேகரன் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்க பட்டார். இதுபோல காங்கிரஸ் கவுன்சிலர் ஜேக்கப் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    இதற்கிடையே பா.ஜ.க. நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு கூடினர்.தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே கவுன்சிலர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இரணியல் போலீஸ் சப்-இன்ஸ பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும்
    • 14-வது ஊதிய ஒப்பந்தம் தொகையை உடனே வழங்கிட வேண்டும்

    கன்னியாகுமரி:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்கிடவும்‌, 14-வது ஊதிய ஒப்பந்தம் தொகையை உடனே வழங்கிடவும், 4 சதவீதம் டி.ஏ. உயர்வை வழங்கவும், நீதிமன்றம் உத்தரவு படி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை வலியுறுத்தி திங்கள் நகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிளை தலைவர் மணி கண்டன் தலைமை தாங்கி னார். அமைப்பாளர் ஹரிகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி னராக மாவட்ட அமைப்பா ளர் குமாரதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சி யின் மாவட்ட பொது செயலாளர் ராஜா, மணி மகேஷ்வர பிள்ளை சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர் விஜயன் நன்றி கூறினார்.

    • மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், நடைபாதைகளை ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    திங்கள்நகர் பஸ் நிலையத்தில் குளறுபடியாக பஸ்களை நிறுத்துவது குறித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், திங்கள்நகர் பேரூராட்சிக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சசி உத்தரவின்பேரில் போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒதுக்கப்பட்ட இடங்களில் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டுமென்றும் மினி பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை கூறினார். மேற்குநெய்யூர் வழியாக பெத்தேல்புரம் செல்லும் பஸ்கள் மற்றும் ஞாறோடு, வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, ஆசாரிப்பள்ளம், ராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டின் வடக்கு பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

    விதி முறைகளை மீறும் அரசு பஸ்கள், மினி பஸ்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், நடைபாதைகளை ஆய்வு செய்தார். அப்போது மாற்றுதிறனாளிகளுக்கு நடை பாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆய்வின் போது திங்கள்நகர் பணிமனை பொது மேலாளர், திங்கள்நகர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சுமன், செயல் அலுவலர் எட்வின்ஜோஸ், கவுன்சிலர் செல்வின்ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திங்கள் நகர் பேரூராட்சி பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
    • ராதாகிருஷ்ணன் கோவிலில் அர்ச்சனை செய்து அனைவருக்கும் பால்பாயாசம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சி பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் சிவகுமார் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் மனோகர் குமார் குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் சிபிராஜ் முன்னிலை வகித்தனர்.


    ராதாகிருஷ்ணன் கோவிலில் அர்ச்சனை செய்து அனைவருக்கும் பால்பாயாசம் வழங்கப்பட்டது. பேருராட்சி பா.ஜ.க. தலைவர் கோபுஜி கவுன்சிலர்கள் சரவணன், முத்துக்குமார், சுஜாதா, கவுதமி, செய்யூர் சிவகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×